தீபத் திருநாள் - திருவண்ணாமலைக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


கார்த்திகை மாதம் வரும் தீபத் திருநாள் மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும். அதிலும் குறிப்பாக திருவண்ணாமலையில் தீபத் திருநாளன்று ஏற்றப்படும் மகாதீபத்தைக் காண்பதற்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்வார்கள். 

அவர்களின் வசதிக்காக பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 25, 26 மற்றும் 27 உள்ளிட்ட மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும்,  திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் 50 குளிர்சாதனம் உள்ள இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அண்ணாமலையாரின் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு போக்குவரத்துத்துறையின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special ac bus run to tiruvannamalai for karthikai deepam


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->