தமிழ்நாடு குறும்பர் சங்க நிறுவன தலைவருக்கு சமூக நீதி விருது..சமூக நல்லிணக்க மீலாது  விழாவில் வழங்கல்!  - Seithipunal
Seithipunal


சமூக நீதி சர்வ சமய உரிமைகள் கூட்டமைப்பு சார்பாக  நடைபெற்ற சமூக நல்லிணக்க மீலாது  விழாவில் தமிழ்நாடு குரும்பர் மக்கள்  சங்க நிறுவன தலைவர் ஆர்.கிருஷ்ணசாமிக்கு  விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.. 

கோவையில்  சமூக நீதி சர்வ சமய உரிமைகள் கூட்டமைப்பு மற்றும் கோவை எகானமிக் சோஷியல் சேம்பர் விங் இணைந்து சமூக நல்லிணக்க 1500 வது மீலாது விழா நிகழ்ச்சி போத்தனூர் பகுதியில் உள்ள தனியார்   அரங்கில் நடைபெற்றது...

சமூக நீதி கூட்டமைப்பின் பொது செயலாளர் டாக்டர் ஜி.முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் தலைவர் ராமவெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்..

நிகழ்ச்சியில் குருஜி சிவாத்மா, பைத்துல் மால் நிறுவன தலைவர் ஹிதாயத்துல்லா,தமிழ்நாடு குரும்பர் சங்க மாநில தலைவர் கிருஷ்ணசாமி, டாக்டர் சுரேஷ் கண்ணன்,ஆடிட்டர் கலீமுதீன்,தணிக்கை ராஜேந்திரன், ,கவிஞர் கோட்டீஸ்வரன்,சிங்கராயர்,மயிலை செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

விழாவில் சமூக ஒற்றுமைக்காக சமய நல்லிணக்க சான்றோர்களுக்கு “மாமனிதர் பெருமானார்  சமூக நீதி விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டது..இதில் தமிழ்நாடு குரும்பர் சங்க ழிறுவனர் மற்றும் மாநில தலைவர் ஆர்.கிருஷ்ணசாமிக்கு மாமனிதர் பெருமானார்  சமூக நீதி விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

விழாவில் பொறியாளர் ஆர்.கே. ரவிக்குமார், சேலம் பாலு,,ராயப்பன்,கோபாலகிருஷ்ணன்,முத்துசாமி, சுதன் குணசேகரன்,சிவநேசன் உட்பட  பலர் கலந்து கொண்டனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Social Justice Award for the leader of the Tamil Nadu Kurumbar Sangam organization Presented at the event for promoting social harmony


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->