செந்தில்பாலாஜி அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை.. கரூர் சம்பவம் குறித்து டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணியில் நடிகர் விஜய் சேர்வது சாத்தியமற்றது எனத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “தமிழக உரிமையை காப்பாற்றும் நோக்கில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு ஆகியவற்றை சி.பி.ஐ.க்கு ஒப்படைக்கக் கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இது தமிழக போலீஸ்துறையின் நம்பிக்கையை காப்பதற்காகவே. எந்த ஆட்சியும் இருந்தாலும், சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக மனு தாக்கல் செய்வது வழக்கம். இதைக் கூறுவதாக நான் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிட்டேன் என்று நினைக்க வேண்டாம்,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: “கரூர் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டியிருக்க வாய்ப்பு இல்லை. அவர் அந்தளவுக்கு கொடூர எண்ணம் கொண்டவர் அல்ல. எடப்பாடி பழனிசாமி தன்னைத் தானே ‘புரட்சி தமிழர்’ எனக் குறிப்பிடுகிறார். ஆனால் அ.தி.மு.க.வில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் அவரின் பயனாளிகள் மட்டுமே.”

அவரது கூற்றுப்படி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உருவாகும். “டாஸ்மாக் மூலம் 22 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டும் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்துக்குச் செல்லாமல் ஊர் ஊராகச் சென்று பேசுவது ஏன்? ஊழல் குறித்து விமர்சிக்க அவருக்கு தகுதி இல்லை,” என தினகரன் கடுமையாக தாக்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Karur Stampede DMK senthil balaji AMMK TTV Dinakaran 


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->