வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை குழுக்கூட்டம்..மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பங்கேற்பு!
Agriculture and Farmer Welfare Department meeting District Collector Tharpakaraj participated
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயிர் கடன் அளவு இறுதி செய்தல் குறித்து மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருகிறது. திருவண்ணாமலை மண்டலத்தில் 157 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் 3 மலைவாழ் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கங்களும் செயல்படுகின்றன. மேலும் இம்மாவட்டத்தில் 4 நகர கூட்டுறவு வங்கிகளும் 8 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்படுகின்றன. மேலும் 2023-24 ம் ஆண்டில் ரூ.905.26 கோடியும் 2024 -25 ஆம் ஆண்டில் ரூ.924.95 கோடியும் பயிர்க்கடன் வழங்கப்பட்டது. 2025-26 ஆம் ஆண்டில் ரூ.965.00 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில் 30.09.2025 வரை 59302 விவசாயிகளுக்கு ரூ.481.45 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2025-26 ஆம் ஆண்டில் கால்நடைகள் பராமரிப்பிற்காக ரூ. 210.00 கோடி நிர்ணயம் செய்யப்பட்டதில் 30.09.2025 வரை 20512 பயனாளிகளுக்கு ரூ.90.21 கோடி அளவில் வழங்கப்பட்டுள்ளது. இக்கடன்களை உரியகாலக்கெடுவிற்குள் திருப்பி செலுத்தினால் விவாசயிகளுக்கான வட்டியை தமிழக அரசே ஏற்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 2026-27-ம் நிதியாண்டிற்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயிர்க்கடனளவு, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளர்ப்பு ஆகியவற்றிற்கு நடைமுறை மூலதனம் நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், வேளாண் இணை இயக்குநர் கோ.கண்ணகி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் அம்ருதா மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
English Summary
Agriculture and Farmer Welfare Department meeting District Collector Tharpakaraj participated