இன்ஸ்பெக்டர் ஐயா.. அதிமுக ஆட்சியில் கட்டிய பூங்காவை காணவில்லை... காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பூங்காவை காணவில்லை என வடிவேலு பட பாணியில் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் "சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் கொருக்குப்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்கப்பட்டது.

அந்தப் பூங்காவை காலப்போக்கில் ஆக்கிரமித்து உணவுகளை விற்பனை செய்யும் இடமாக மாற்றியுள்ளனர். அந்த பூங்காவை மீட்டு தர கோரி கடந்த ஜூலை மாதம் சென்னை மாநகராட்சி மேயரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே கொருக்குப்பேட்டை குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்த அந்த பூங்காவை கண்டுபிடித்து தர வேண்டும்" என தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Social activist filed complaint that Korukuppet Park was missing


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->