#பெரம்பலூர் : பாம்பை வைத்து மேடையில் நடனம்.. பொங்கல் விழாவில் துணிகரம்.!
Snake dance In pongal Festival of Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களிலும் மிகவும் கோலாகலமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
காணும் பொங்கல் நாளில் அந்தந்த ஊரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்கள் பலரும் பொங்கலை கொண்டாடிய தீர்த்தனர். மேலும், சில ஊர்களில் இரவு நேரங்களில் கிராமத்தில் மேடை அமைத்து சிறுவர், சிறுமியர்களை நடனம் ஆட விட்டனர்.

அந்த வகையில், குரும்பலூர் அருகே இருக்கும் இருளர் மக்கள் செய்த செயல்தான் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளது. அவர்கள் தங்களின் குலதெய்வமாக மதிக்கும் பாம்பை வைத்து மேடையில் நின்றவாறு நடனமாடி அசத்தியுள்ளனர்.
ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இவர்கள் பாம்பை பயன்படுத்தி நடனமாடிய வீடியோ பரவி பலரிடமும் எதிர்ப்புகளையும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
English Summary
Snake dance In pongal Festival of Perambalur