மிக்ஜாம் புயல் - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிக், கல்லூரிகளுக்கு விடுமுறை?
six districts schools and colleges holiday for heavy rain
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மிக்ஜம் புயல் தீவிர புயலாக வலுப்பெற உள்ளதால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவில் இருந்து தற்போது வரை சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்த மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலின் எதிரொலியாக சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல், நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
English Summary
six districts schools and colleges holiday for heavy rain