சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 2 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்.!
Sivakasi crackers factory blast 2 peoples death
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு ஊராம்பட்டி என்ற கிராமத்தில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. 20க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்டு இந்த பட்டாசு ஆலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வெப்பம் காரணமாக மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீ பற்றியது. இதில் வேகமாக பரவிய தீ அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இந்த வெடி விபத்தில் இருளாயி (வயது 48), குமரேசன் (வயது 30), அய்யம்மாள் (வயது 54), சுந்தர்ராஜ் (வயது 27) ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தனர்.
மேலும் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் செந்தில்குமார் என்பவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகாசி பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்து பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Sivakasi crackers factory blast 2 peoples death