திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிய ஓட்டய கைதி! போலீசார் வலைவீச்சு.!
Sivagangai prisoner escapes open jail
சிவகங்கை, புரசடை உடைப்பு திறந்த வெளி சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர், காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் கோபால் (வயது 29) கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டு இருந்தார். தண்டனை காலம் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் சிறையில் இருந்து கைதிகோபால் தப்பி ஓடியதாக இன்று அதிகாலை சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கைதி கோபாலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Sivagangai prisoner escapes open jail