அ.ம.மு.க வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல்.. இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் குரு. முருகானந்தம் மீது மானாமதுரையில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு டிடிவி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் குரு. முருகானந்தம். இவர் சம்பவத்தன்று மானாமதுரை அருகே சென்ற சமயத்தில், மர்ம கும்பலால் கொலை செய்யும் முயற்சியுடன் தாக்குதல் நடத்தப்பட்டது. 

அங்குள்ள பொதுமக்கள் ஒருவர் தாக்கப்படுவதை கண்டு விரைந்து வரவே, முருகானந்தத்தை தாக்கிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதனையடுத்து, அவரை மீட்ட பொதுமக்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

இந்த விஷயத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், முருகானந்தம் விரைந்து உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், " கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு குரு. முருகானந்தம் அவர்கள் மீது மானாமதுரையில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்குக் காரணமான சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு.முருகானந்தம் விரைவில் முழு நலம் பெற்று வர பிரார்த்தனை செய்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga AMMK Supporter Attack by Strangers TTV Dhinakaran Condemn and Request to Police Arrest Culprits


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal