இறந்த தாயின் அழுகிய உடலை வைத்து 7 நாட்கள் ஜெபம்.. எல்லாம் கிருப..! சகோதரிகள் திகில் செயல்.!! - Seithipunal
Seithipunal


இறந்த தாய் உயிர்தெழுவார் என்ற நம்பிக்கையில் உடலை வைத்து ஜெபம் செய்த மகளால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் , சொக்கப்பட்டி பகுதியில் ஊருக்கு வெளிய மேரி என்ற ஒய்வு பெற்ற ஆசிரியை தனது இரு மகளுடன் வசித்து வருகிறார். கிறிஸ்துவ மதத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர்கள் நாள் முழுவதும் ஜெபம் செய்து கொண்டே இருப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், மேரியின் உடல் நிலை சிறிது நாட்களாக சரியில்லாமல் இருந்துள்ளது. இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை காண வந்துள்ளனர். அப்போது மேரியின் சடலத்தை வைத்து அவரை உயிர்பிக்க சொல்லி ஜெபம் செய்து வந்துள்ளனர்.

இதனை கண்ட அவர்கள் அதிர்ச்சியைந்துள்ளனர்.  சகோதரிகளிடம் கூறி தாயை அடக்கம் செய்ய கூறியுள்ளனர். ஆனால் அவர்களை திட்டி வெளியே அனுப்பியுள்ளனர். இதனை அவர்கள் கிராம மக்கள் சிலரிடம் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து கிராம மக்கள் அளித்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரித்த போது தாயார் உயிருடன் இருப்பதாகவும் அதனால் அவரின் உடலை எடுத்து செல்ல விடமாட்டோம் எனவும் அவர்கள் தகராற்றில் ஈடுப்பட்டனர்.

இதனை அறிந்து அங்கு வந்த மணப்பாறை தாசில்தார் சேக்கிழார், அவர்களிடம் பேசியுள்ளார். ஆனால், அவரிடமும் தங்கள் தாய் மீண்டும் உயிருடன் வருவார் என இருவரும்  வாக்குவதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனை அடுத்து  சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மேரியின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

 மேரி எப்படி இறந்தார் என பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 7 நாட்களாக தாய் திரும்ப வருவார் என கூறி இறந்த சடலத்தை வைத்து ஜெபம் செய்த சகோதரிகளால் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sisters who prayed with the body of a dead mother


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal