பெயரில் மட்டும்தான் சிங்கப்பெண்ணா...? - திட்டத்தைத் தொடங்க முடியாத அரசை வெளுத்து வாங்கிய டிடிவி தினகரன்...! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 18 வயது இளம்பெண் ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் போதைப்பொருள் பழக்கம் சமூக அமைதிக்கும், பெண்களின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களின் ஆற்றலை விளையாட்டு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் நோக்கி திருப்ப வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அதற்கு இணையாக மாநிலம் முழுவதும் பரவி கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலுமாக கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு அமைப்புகள் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வராதது பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் சூழலில், பாதுகாப்பு கட்டமைப்புகளை விரைந்து செயல்படுத்தி, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது காலத்தின் அவசியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இளம்பெண் உயிரிழப்பு சம்பவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் மதுபான விடுதிகள் மீது மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றும், அங்கு சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபடும் கும்பல்களை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

போதைப்பொருள் இல்லாத, பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சமூக சூழலை உருவாக்க அரசு முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Singhappenn name only TTV Dhinakaran who bought government that could not start project


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->