மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட்டா...? 12ஆம் வகுப்பு விடைத்தாள்களில் மெகா குளறுபடி...! - தவறை ஒப்புக்கொண்டது சிப்ஸ்...! - Seithipunal
Seithipunal


12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு மத்தியில், மதிப்பீட்டு நடைமுறையில் பயன்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் சில தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததை சிபிஎஸ்இ வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.விடைத்தாள்களை இணையவழியில் மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்ய பயன்படுத்தப்படும் மின்னணு மதிப்பீட்டு தளத்தில் பாதுகாப்பு பலவீனங்கள் இருப்பதாக அண்மையில் பல்வேறு தரப்பினரால் கேள்விகள் எழுப்பப்பட்டன.

குறிப்பாக, சிபிஎஸ்இ பயன்படுத்திய மேகத் தரவு சேமிப்பு கட்டமைப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக இளம் இணையப் பாதுகாப்பு ஆர்வலர் நிசர்கா அதிகாரி ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு கல்வி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, டெல்லியைச் சேர்ந்த மாணவர் வேதாந்தா, மறுமதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக பெற்ற விடைத்தாளில் இடம்பெற்றிருந்த கையெழுத்து தன்னுடையது அல்ல என்றும், அது தான் எழுதிய விடைத்தாளாக தெரியவில்லை என்றும் சந்தேகம் எழுப்பியிருந்தார்.இந்த விவகாரம் தீவிர கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ வாரியம் உள்மட்ட ஆய்வை மேற்கொண்டது.

அந்த ஆய்வின் போது மின்னணு மதிப்பீட்டு அமைப்பில் சில நடைமுறை மற்றும் தொழில்நுட்ப குளறுபடிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தரவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் உயர்கல்வி தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

தற்போது கண்டறியப்பட்ட அனைத்து தொழில்நுட்ப குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அடுக்குகள் மேலும் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் வாரியம் உறுதியளித்துள்ளது.

மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் கல்வி பதிவுகளின் நம்பகத்தன்மையை பாதுகாப்பது மிக உயர்ந்த முன்னுரிமையாக கருதப்படுவதாகவும், மின்னணு மதிப்பீட்டு அமைப்பின் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை தொடர்ந்து மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you playing with future students Mega mess 12th class answer sheets Chips admits mistake


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->