ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - விசாரணையில் சிக்கிய சித்த மருத்துவர்..!
siddha doctor arrested for harassment case in chennai
சென்னையில் உள்ள எம்கேபி நகர் பகுதியை சேர்ந்த ஏழு வயது சிறுமி்க்கு கடந்த 2022-ம் ஆண்டு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரது பெற்றோர் சிறுமியை ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமிக்கு யாரோ பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன் படி போலீஸார் விசாரணை நடத்தியதில், கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரில் சித்த மருத்துவராக உள்ள பாலசுப்பிரமணி, பாதிக்கப்பட்ட சிறுமியை தனது கிளினிக்குக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்தது தெரியவந்தது.
உடனே போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட சித்த மருத்துவரான பாலசுப்பிரமணிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளி்த்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சத்தை நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
siddha doctor arrested for harassment case in chennai