மூக்கு, காதில் எல்லாம் நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்கமாட்டோம்!மகளிர் உரிமைத்தொகை வாங்குவோர் நகை போடக்கூடாதா?- அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்
Shouldn those receiving women rights be allowed to wear jewelry The minister should apologize Nainar Nagendran
விருதுநகர் மாவட்டம் முள்ளிச்சேவல் பகுதியில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம், பெண்கள் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக மனு அளித்தனர்.
அந்த நேரத்தில், “இப்படி நகை போட்டு வந்தால் எப்படி பணம் கிடைக்கும்? நகை அணிந்து வந்தால் உரிமைத்தொகை கிடைக்காது” என்று அமைச்சர் நகைச்சுவையாகக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
நலத்திட்டங்களை தருகிறோம் என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது.
விருதுநகர் அருகே உரிமைத்தொகை கேட்ட பெண்களிடம், சாத்தூர் ராமச்சந்திரன் நாகரிகமற்ற முறையில் பேசி உள்ளார்.
“மூக்கு, காதில் நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்கமாட்டோம்” என அமைச்சர் கூறியிருப்பது பொருத்தமற்றது.
அரசு பதவியின் மாண்பை மறந்து கேலி–கிண்டல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
ரூ.1000 உரிமைத்தொகை வாங்குவோர் நகை அணியக்கூடாதா?
உரிமைத்தொகை கேட்ட பெண்களிடம் நாகரிகமற்ற முறையில் பேசிய அமைச்சர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary
Shouldn those receiving women rights be allowed to wear jewelry The minister should apologize Nainar Nagendran