தமிழகம் முழுவதும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு! தகுதி இருந்தால் மட்டுமே பால் அட்டை வழங்க உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் கொழுப்பு சத்து அடிப்படையில் பால் தரம் பிரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அதில் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை, நீலம் போன்ற வண்ணம் கொண்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. அதிக கொழுப்பு நிறைந்த சிகப்பு நிற பால் பாக்கெட் அரை லிட்டர் 30 ரூபாயிலிருந்து 34 ரூபாயாகவும், ஆரஞ்சு நிற பால் பாக்கெட் 24 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. ஆனால் பால் அட்டைதாரர்களுக்கு பழைய விலையான ரூ.23ல் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் ஆரஞ்சு பால் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆவினிடம் இருந்து மொத்தமாக பால் கொள்முதல் செய்யும் ஏஜெண்டுகளை அதிகமாக இந்த அட்டைகளை வைத்துள்ளனர். இந்த நிலையில் புதியதாக ஆரஞ்சு பால் அட்டைகளை வழங்க வேண்டாம் என ஆவின் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. 

சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் புதிய ஆரஞ்சு பால் அட்டைகளை வாங்க ஆவின் பாலகம் மற்றும் மண்டல ஆவின் அலுவலகத்தில் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் தகுதியான நபர்களுக்கு ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டுமே ஆரஞ்சு பால் அட்டைகளை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக பால் அட்டை வழங்கும் பணி மண்டல அலுவலகங்களில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. புதிய ஆரஞ்சு பால் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 15ஆம் தேதி முதல் பால் அட்டை விநியோகம் செய்யப்பட உள்ளது. எனினும் ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கு ஆரஞ்சு பால் பாக்கெட்டில் ஒன்றரை லிட்டர் மட்டுமே வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் விலை உயர்த்தப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை நுகர்வோர் வாங்க தவிர்த்ததால் ஏஜென்ட்கள் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் கொள்முதலை குறைத்தனர். இதன் காரணமாக ஆவின் நிறுவனமும் உற்பத்தியை குறைத்தது. எனினும் பச்சை மற்றும் நீல நிற பால் பாக்கெட்டைகளை வாங்கியவர்கள் திருப்தி அடையாததால் மீண்டும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்க துவங்கி உள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஆரஞ்சு பால் பாக்கெட்டுகளின் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shortage of orange milk packets allover tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->