சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு...! முதியவருக்கு சாகும் வரை ஆயுள்...ரூ.3 லட்சம் நிவாரணம்...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த 64 வயது முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சித்திரை செல்வன் என்பவர், 10 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமியின் தந்தை வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து வழக்கு சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, தீவிர புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது சேரன்மகாதேவி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரதீப் தலைமையில் புலனாய்வு தீவிரப்படுத்தப்பட்டு, குற்றம்சாட்டப்பட்ட முதியவர் கைது செய்யப்பட்டார்.புலனாய்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதன்பின்னர் திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.வழக்கின் விசாரணை முடிவில், முதியவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து நீதிபதி சுரேஷ்குமார், குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையைத் தொடர்ந்து கண்காணித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம், சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகளின் பணியை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷவேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.வழக்கின் புலனாய்வுக்கு உதவிய தலைமை காவலர் துர்காதேவி மற்றும் நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடக்க கட்டத்தில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டவர் அப்போதைய சேரன்மகாதேவி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆவார். தற்போது அவர் சென்னை மாநகரில் சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்பில் உதவி காவல் துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையின் விளைவாக, நடப்பு ஆண்டில் இதுவரை 18 போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 18 குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.இதில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 5 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறை தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எந்தவித சமரசத்துக்கும் இடமின்றி கடுமையான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking verdict case harassement girl Life sentence until death elderly man 3 lakh compensation


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->