''திமுகவை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த கழகத் தலைவர் தலைமையில் அணிதிரள்வோம்''; உதயநிதி ஸ்டாலின்..!
Udhayanidhi says we will rally under the leadership of the party president to defeat the crooks who want to destroy the DMK
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் 08 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தனது எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் "தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் தி.மு. கழகத்தின் தலைவராக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று!
தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டர்களைத் தொய்வின்றி வழிநடத்தி- அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்.. இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த கழகத் தலைவர் தலைமையில் அணிதிரள்வோம்.'' என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாதனைகள் குறித்து வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
English Summary
Udhayanidhi says we will rally under the leadership of the party president to defeat the crooks who want to destroy the DMK