நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்கள்...! 'அனைவரையும் பத்திரமாக மீட்டு வாருங்கள்'..! - மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்...! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் ப.மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,"நேபாளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள பனிப்பாறை சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பேரிடரில் 392 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 800 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 910 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் இந்திய வெளியுறவுத்துறை, நேபாள அரசு மற்றும் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.கைலாஷ் யாத்திரைக்காக தமிழ்நாட்டில் இருந்து 103 தமிழர்கள் நேபாளத்துக்கு சென்றிருந்தனர்.

அவர்களில் 54 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது.இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேநேரத்தில், நேபாளத்தில் இன்னும் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் விரைந்து மீட்டு, பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பது இந்திய அரசின் முக்கியமான கடமையாகும். குறிப்பாக தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து வருவதில் தமிழக அரசுக்கும் கூடுதல் பொறுப்பு உள்ளது.

எனவே, இந்திய அரசின் மீட்புப் பணிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் விரைவாக மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்க தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்புகிறேன்.இவ்வாறு ப.மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamils ​​trapped Nepal disaster Return everyone safely Manickam Thakur urges


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->