திண்டுக்கல்லில் பரபரத்த கொலை வழக்கு...! மனைவியை சாம்பலாக்கிய கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி உத்தரவு...!
shocking murder case Dindigul judge given life imprisonment husband who burnt his wife ashes
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே குடும்பத் தகராறு கொடூரமாக முடிவடைந்த வழக்கில், மனைவிக்கு தீவைத்து உயிரிழக்கச் செய்த தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனையுடன் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
தாடிக்கொம்பு அருகிலுள்ள ராஜலட்சுமி நகரைச் சேர்ந்த கணேசன் (56) என்பவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி அமுதா (44). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த 07.08.2019 அன்று மீண்டும் ஏற்பட்ட தகராறு உச்சக்கட்டத்தை எட்டியது. ஆத்திரத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத கணேசன், பெயிண்டுடன் கலக்கப் பயன்படுத்தப்படும் தின்னர் திரவத்தை அமுதா மீது ஊற்றி தீவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அமுதா, உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனளிக்காமல் அமுதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தாடிக்கொம்பு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சாட்சிகள், ஆவணங்கள் மற்றும் விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த நீதிபதி கணேசன், குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கருதி, கணேசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், கூடுதலாக சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
shocking murder case Dindigul judge given life imprisonment husband who burnt his wife ashes