தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்! 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...! - 56 வயது தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பணிக்கர்குளம் கீழத்தெருவைச் சேர்ந்த ஜெயமுருகன் (56), டைல்ஸ் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து குழந்தைகள் உதவி மையத்திற்கு (சைல்ட்லைன்) ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட சிறுமியிடமும், அப்பகுதியிலும் விரிவான விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்புத் துறை அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் தலைமறைவாக இருந்த ஜெயமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking incident Thoothukudi 11 year old girl harassed 56 year old worker arrested under POCSO Act


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->