திருப்பூரில் அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு தேநீரில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்...! அடுத்து நடந்தது என்ன..? - Seithipunal
Seithipunal


திருப்பூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, 8ஆம் வகுப்பு மாணவியாக இருக்கிறார். கடந்த 12ஆம் தேதி, சிறுமியின் பெற்றோருக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட தந்தை வீடு விட்டு வெளியேற, மனம் தளர்ந்த தாயார் அதிகளவு தூக்கமருந்துகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடனே மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் வீட்டில் சிறுமி தனியாக இருந்தார்.அத்தருணத்தில், மங்கலத்தை அடுத்த பூமலூரைச் சேர்ந்த பனியன் தொழிலாளி பாலமுருகன் (34), சிறுமி இருக்கும் வீட்டிற்குச் சென்றார்.

அங்கு ஆறுதல் வார்த்தைகள் பேசும் பெயரில் ஏமாற்றிய அவர், சிறுமிக்கு தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அதை அருந்தியவுடன் மயங்கி விழுந்த சிறுமியை தூக்கிச் சென்று தனது வீட்டில் வைத்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை சிறுமி நினைவில் கொள்ளவில்லை. மறுநாள், வீட்டிற்கு வந்தபோது கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு தவித்தார்.

இதுகுறித்து, திருப்பூர் அரசு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு திரும்பிய தாயிடம் சிறுமி விவரங்களை பகிர்ந்தார். அதனால் அதிர்ச்சி அடைந்த தாய், சிறுமியை உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, தாயார் திருப்பூர் கே.வி.ஆர்.நகர் அனைத்து மகளிர் காவலில் புகாரளித்தார். மேலும், காவலர்கள் மருத்துவமனைக்கு சென்று சிறுமியை விசாரித்தனர். அப்போது, பாலமுருகன் கொடுத்த தேநீரை குடித்ததும் மயக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் தன்னை அவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அதன் பின் நடந்த சம்பவம் குறித்து எதுவும் நினைவில் இல்லை என்றும் சிறுமி தெரிவித்துள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில், காவலர்கள் பாலமுருகனை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 13 வயது சிறுமிக்கு தேநீரில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம், திருப்பூர் பகுதியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock Tiruppur 13 year old girl raped by giving her tea sedatives What happened next


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->