பெரியபாளையத்தில் அதிர்ச்சி...! கடையில் பஜ்ஜி சாப்பிட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த சிறுமி...! காரணம் என்ன...?
Shock Periyapalayam girl died shortly after eating bajji at shop What reason
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தந்தையுடன் சென்றபோது பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமி திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் லச்சுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.

இவரது 9 வயது மகள் ஸ்ரீத்திகா. லச்சுவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.செந்தில்குமார் செங்குன்றம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.கடந்த 3-ந் தேதி செந்தில்குமார் தனது மகள் ஸ்ரீத்திகாவுடன் பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் பஜார் வீதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள கடை ஒன்றில் மகளுக்கு பஜ்ஜி வாங்கிக் கொடுத்துள்ளார்.பஜ்ஜியை சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமிக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதுடன், அடுத்த சில நொடிகளில் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்குமார் உடனடியாக மகளை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீத்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமியின் திடீர் உடல்நலக்குறைவு மற்றும் உயிரிழப்பு குறித்து பெரியபாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறுமியின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பிறகே ஸ்ரீத்திகாவின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.9 வயது சிறுமி பஜ்ஜி சாப்பிட்ட சிறிது நேரத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shock Periyapalayam girl died shortly after eating bajji at shop What reason