சிவகங்கையில் அதிர்ச்சி : காட்டிற்குள் இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே  இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர், ஆண் நண்பர் ஒருவருடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பெண்ணுடன் பேசி கொண்டிருந்தவரை நோட்டமிட்ட ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கியதை அடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை மிரட்டிய அந்த கும்பல், அவரை ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது 5-க்கும் மேற்பட்டோர் என்று  கூறப்படும் நிலையில், தப்பியோடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock in Sivagangai Young woman gang raped in the forest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->