கோத்தகிரியில் அதிர்ச்சி: தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை... நாயைக் கவ்விச் சென்ற பயங்கரம்...! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த நாய்களை வேட்டையாடிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் இல்லாத நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கோத்தகிரி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த 10-ந்தேதி சிறுத்தை ஒன்று திடீரென நுழைந்தது. பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்த அந்தச் சிறுத்தை, அங்கிருந்த 3 நாய்களை வேட்டையாட முயன்றது.

பின்னர், ஒரு நாயைக் கவ்வியபடி அங்கிருந்து சென்றது.அந்த நேரத்தில் பள்ளி மாணவர்கள் யாரும் வளாகத்தில் இல்லாததால், அதிர்ஷ்டவசமாகப் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

பள்ளி வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்து நாய்களை வேட்டையாடிய காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியில் பதிவாகியுள்ளது.

இந்தக் காட்சியால் பள்ளி நிர்வாகத்தினரும் அப்பகுதி மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பள்ளி வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அதை விரைவாகக் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே சிறுத்தை நடமாடுவதால், மீண்டும் பள்ளி வளாகத்துக்குள் நுழையுமோ அல்லது பொதுமக்களைத் தாக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால் பள்ளி மாணவர்களும் அப்பகுதி மக்களும் பீதியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock in Kotagiri Leopard enters private school Horrific moment it bites dog


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->