விசாரணையில் ஷாக்!...விடுதி உரிமையாளரின் அலட்சியத்தால் 2 பெண்கள் பலி!...உரிமையாளர் அதிரடி கைது!
Shock in investigation 2 women died due to hotel owners negligence Owner arrested
மதுரை பெரியார் நிலையம் அருகே உள்ள கட்ராபாளையத்தில் விசாகா என்ற
பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் பெரியார் நிலையம் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், தீ விபத்தில் சிக்கிய பெண்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. இருந்த போதிலும் தீ விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். மேலும் உயிரிழந்த 2 பேரும் சரண்யா, பரிமளா என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். தொடர்ந்து காயமடைந்த மற்ற பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட போது, அடுத்தடுத்து தீ பரவி கரும்புகை எழுந்தது. இதனால், பெண்களுக்கு மூச்சு திணறல் மற்றும் சுவாச கோளாறு பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், விசாகா பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, உரிய அனுமதி பெறாமல் மகளிர் விடுதி நடத்தி வந்த இன்பா என்பவரை பெண் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இந்த விடுதியை காலி செய்யக்கோரி கடந்த ஆண்டே மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Shock in investigation 2 women died due to hotel owners negligence Owner arrested