செந்தில்பாலாஜியை நீக்கிய விவகாரம் | சற்றுமுன் ஆளுநர் ரவியின் அதிரடி நடவடிக்கை!  - Seithipunal
Seithipunal


அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்தது தொடர்பாக, தமிழக ஆளுநர் தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் ஆலோசனையை மேற்கொள்ள ஒரு வாரம் முகாமிட்டு உள்ளார்.

இந்த நிலையில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்களை தமிழக ஆளுநர் நேரில் சந்தித்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவிலிருந்து நீக்கி உத்தரவை செயல்படுத்துவது குறித்து சட்ட ஆலோசனைகளைப் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய சட்டத்துறை அமைச்சகத்தில் இது குறித்து தமிழக ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சற்று முன்பு வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அரசியல் விமர்சகர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்தின் படி, பண மோசடி, சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஒரு நபரை, காப்பாற்றும் நோக்கில் அமைச்சரவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது என்பதே ஆளுநரின் நடவடிக்கைகள் உணர்த்துகிறது.

அதே சமயத்தில், தன்னுடைய அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பது அம்மாநிலத்தில் உள்ள முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. 

அந்த அதிகாரத்தை, உரிமையை ஆளுநர் தட்டிப் பறிப்பதால், அந்த உரிமையை மீட்பதற்காகவும், இது ஒரு அதிகார மோதல் என்பதாகவுமே திமுகவும், தமிழக அரசும் நினைக்கிறது. 

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்பது மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்ற அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை திமுக மற்றும் தமிழக அரசு அணுகுவதால், இது மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் இடையே நடக்கும் நேரடியான மோதல் என்று அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji Minister post Issue TN Governor Meet Central Govt Law Ministry


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->