பாலியல் வழக்கில் "காங்கிரஸ் அரசியல் செய்யக்கூடாது" - அண்ணாமலை அட்வைஸ்.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவ கௌடாவின் மகன் ரேவண்ணா, ஹசன் மாவட்டம் ஹோலேநரசிம்மபுரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் நிலையில் அவரது மகன் பிரஜ்வல் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். 

இவர் கடந்த தேர்தலில் அசன் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பாஜக மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைந்ததால் மீண்டும் அசன் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. இந்த சம்பவம் நடைபெற்றதும் பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். 

அதனைத் தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரஜ்வல் மற்றும் அவரது தந்தையின் மீது முன்னாள் பணிப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரஜ்வல்  ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளனர். 

மேலும் தேவகவுடாவில் மகன் ரேவண்ணா நேற்று கர்நாடக மாநில போலீசார் கைது செய்தனர். நிலையில் கர்நாடகாவில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை "ரேவண்ணாவின் முன்ஜாவின் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்பு புலனாய்வு அமைப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா மற்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரர் இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். 

அவர்கள் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, பெண்களுக்கு நியாயம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். சிறப்பு புலனாய்வு குழுவின் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது நியாயமாக இருக்க வேண்டும். புலனாய்வு விசாரணைக்கு நாங்கள் யாரும் தடையாக இல்லை. எங்க தலைவர்கள் உட்பட அனைவரும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai said Congress should not do politics in revanna case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->