குளிர்ச்சியான 'சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக்' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க  - Seithipunal
Seithipunal


குளிர்ச்சியான சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 
சப்போட்டா பழம் 
பாதாம் 
பிஸ்தா 
சர்க்கரை 
சாக்லேட் 
பால் 

செய்முறை: 
முதலில் பாதாம் மற்றும் பிஸ்தா பருப்பை நன்றாக பொடி செய்து கொள்ளவும். சாக்லேட்டை நன்றாக உருக்கி எடுத்துக் கொள்ளவும். 

ஒரு மிக்ஸி ஜாரில் சப்போட்டாவை சுத்தம் செய்து தோல் நீக்கி அதில் சேர்த்து, காய்ச்சி ஆற வைத்த பால், தேவையான அளவு சர்க்கரை, உருக்கி வைத்துள்ள சாக்லேட் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

பிறகு தேவையான அளவு ஐஸ் கட்டிகளையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கண்ணாடி டம்ளரில் அரைத்த மில்க் ஷேக்கை ஊற்றி அதில் பொடி செய்து வைத்துள்ள பாதாம், பிஸ்தாவை சேர்த்து பருகினால் அவ்வளவுதான் குளிர்ச்சியான சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sapota Chocolate Milkshake in tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->