ஊட்டி டூர் போறீங்களா.. இ-பாஸ் விண்ணப்பிக்க இணையதளம் இதோ.!! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவர்களுக்கான கோடை‌ விடுமுறை‌ தொடங்கியுள்ளதாலும், தமிழக முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாலும் பொதுமக்கள் மலை பிரதேசங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் மலைப் பிரதேசங்களுக்கு சொல்லும் சுற்றுலா வாகனங்கள் விபத்தில் சிக்குவதால் அதனை நெறிமுறை படுத்த இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்ல இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரியை நீலகிரி கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் epass.tnega.org என்ற இணையதளம் வாயிலாக இ-பாஸ்க்கு நாளை விண்ணப்பிக்கலாம்.

ஊட்டி செல்ல மே 7 முதல் இ-பாஸ் கட்டாயமாக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Epass website for Ooty tourist


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->