ஜாபர் சாதிக் வருகைக்குப் பின்பே தமிழகத்தில் மெத்தபெட்டமைன் புழக்கம்... அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!
Drug Seizure at TVK Functionary House Minister Nirmal Kumar Slams Opposition
நாகை மாவட்டத் தவெக நிர்வாகியாக இருந்த பூபாலன் வீட்டில் ரூ.270 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், ஜாபர் சாதிக் வருகைக்குப் பின்பே தமிழகத்தில் மெத்தபெட்டமைன் புழக்கம் அதிகரித்ததாகத் தெரிவித்தார். போதைப்பொருள் விவகாரத்தில் யார் எந்தக் கட்சியினராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியாக இருந்திருந்தால் இதனை 'கோலப்பொடி' அல்லது 'உரம்' எனக் கூறி மறைத்திருப்பார்கள் என விமர்சித்தார்.
அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது தாக்குதல்
அதிமுக குறித்துப் பேசிய அமைச்சர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக் கட்சி மிக மோசமான நிலையை அடைந்துள்ளதாகக் கூறினார். மேலும், அதிமுகவின் சொத்துகளைத் திமுகவிடம் அடகுவைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாகவும், முதலமைச்சராக விஜய்யைச் சந்திப்பதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய முடிவை அதிமுக தலைமைக்கழகத்தில் உள்ள ஒரு செங்கல்கூட ஏற்றுக்கொள்ளாது எனத் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணம் மற்றும் கோவை பெரியார் அறிவுலகம் விவாதம்
மற்ற மாநிலங்களில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.30 வரை வாங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், "யார் திறந்து வைத்தாலும் திட்டத்தை உருவாக்குவது திமுகதான்" என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்குப் பதிலடி கொடுத்தார். கோவை பெரியார் அறிவுலகம் என்பது திமுகவினரின் சொந்தத் திட்டம் கிடையாது என்றும், அது முற்றிலும் அரசுப் பணத்தில் கட்டப்பட்டது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தினார்.
English Summary
Drug Seizure at TVK Functionary House Minister Nirmal Kumar Slams Opposition