பரபரப்பு! கல்யாண ஆசை காட்டி அழைத்து வந்து கொலை செய்ததாக சொன்ன கவினின் காதலி...! அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் காதலி ''சுபாஷினி'' தற்போது வீடியோ ஒன்று வெளியிட்டு தனது காதல் உறவு மற்றும் கவினின் கொலை குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.அதில் அவர் தெரிவித்திருப்பதாவது," கவினும் நானும் உயிருக்கு உயிராக காதலித்தோம்.

காதலிக்கிறாயா?என்று எனது அப்பா கேட்டார். அப்போது இல்லை என்று தெரிவித்தேன். செட்டிலாக 6 மாதம் டைம் வேண்டும் என கவின் தெரிவித்ததால் அப்பா கேட்டபோது காதலிக்கவில்லை என தெரிவித்தேன். அப்பாகிட்ட சுர்ஜித் இந்த தகவலை சொல்லிவிட்டான். அப்பா என்னிடம் கேட்டார்.

சகோதரர் சுர்ஜித்துக்கு காதல் விவகாரம் தெரிந்ததால் தந்தையிடம் தெரிவித்துவிட்டார். அவர் கேட்டபோது காதலிக்கவில்லை என தெரிவித்தேன். சுர்ஜித் கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வாருங்கள் என அழைத்தான். உங்கள் திருமணம் முடிந்தால்தான் எனது வாழ்க்கையை திட்டமிட முடியும் என்று தெரிவித்து சுர்ஜித் அழைத்துள்ளான்.

கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வருமாறு சகோதரர் சுர்ஜித் தெரிவித்தது வீட்டிற்கு வந்து பேசும்போது தான் தெரிந்தது.அதன்பின்னர் கவினுக்கும் சுர்ஜித்தும் இடையில் என்ன விதமாக பேச்சுவார்த்தை நடந்தது எனத் தெரியவில்லை.கடந்த  28-ந்தேதி மாலையில் தான் அவனை வரச்சொல்லி இருந்தேன்.

அதற்கு முன்பாகவே இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துவிட்டது.யாரும் அவர்கள் இஷ்டத்திற்கு எங்கள் உறவை கொச்சைப்படுத்தி வதந்தி பரப்ப வேண்டாம்" என அவர் அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sensation Kavins girlfriend claims that he brought her to him and killed her under pretext marriage Shocking


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->