போலி பத்திரம்... அடாவடி வழக்கு.. சொந்தக் கட்சியினரின் குடும்பத்தை மிரட்டும் திமுக நிர்வாகி..!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திமுக ஆட்சியில் பல்வேறு நில அபகரிப்பு வழக்குகளில் அப்போதைய அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பிறகு அமைந்த அதிமுக ஆட்சியில் நில அபகரிப்புக்கு என தனி பிரிவு உருவாக்கப்பட்டு பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

திமுகவை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது வரை அந்த வழக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர். திமுக என்றாலே நில அபகரிப்பு என பெயர் வாங்கும் அளவிற்கு கட்சியின் நிர்வாகிகள் செயல்பட்ட வரலாறு உண்டு.

இந்த நிலையில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர் சொந்த கட்சியினரின் பரம்பரை சொத்தை அபகரித்துக் கொண்டு போலி வழக்கு மூலம் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் கிழக்கு மாவட்டம் மல்லூர் பேரூராட்சி திமுக நகர செயலாளராக சுரேந்திரன் என்பவர் இருந்து வருகிறார். 

இவர் திமுக அலுவலகம் அமைப்பதற்காக மூத்த திமுக நிர்வாகி ஒருவரின் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்தில் 1300 சதுர அடி காலி இடத்தை வாடகைக்காக எடுத்து இருந்தார்.

இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் சொந்த பிரச்சனை காரணமாக திமுக அலுவலகம் அமைந்த இடத்தை காலி செய்து தருமாறு மல்லூர் நகர செயலாளர் சுரேந்திரமிடம் கேட்டுள்ளார்.

ஆனால் வாடகைக்காக எடுத்த இடத்தை காலி செய்யாத சுரேந்திரன் 1300 சதுர அடி இடத்திற்கு 2 லட்சம் ரூபாய் முன் தொகை கொடுத்ததாக போலியான பத்திரம் தயார் செய்து அதன் அடிப்படையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இரவு நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர் வீட்டிற்கு சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார். அதன் அடிப்படையில் நிலத்தை பறிகொடுத்தவர் காவல் நிலையத்தில் கடந்த 26/09/2022 (CSR - 378/2022) அன்று புகார் அளித்துள்ளார்.

ஆனால் இந்த புகாரின் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களின் சொத்துக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் பொதுமக்களின் சொத்துக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Selam DMK admin threatening not to vacate rented land


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->