சேலம் | துணி துவைக்க சென்ற தாயின் கவன குறைவு! கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தைக்கு நேர்ந்த சோகம்! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் தண்ணீர் தொட்டில் தவறி விழுந்து குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது:

சேலம்: ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி, திருமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயநாதன் (வயது 32). இவர் தனியார் கிரானைட் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு ஹரிஷ் (வயது 3) என்ற ஆண் குழந்தை மற்றும் ரக்ஷிதா 7 மாதக் பெண் குழந்தை உள்ளது. 

இவர்களது வீட்டின் முன்பு தண்ணீர் தேக்கி வைப்பதற்காக தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதிலிருந்து மின்சார மோட்டார் பழுதடைந்ததால் அதனை சரிபார்க்க கொடுத்திருந்தனர். 

இந்நிலையில், திவ்யா வீட்டில் உள்ள துணிகளை துவைப்பதற்காக தொட்டியின் மூடியை அகற்றிவிட்டு தண்ணீரை எடுத்து துணி துவைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஹரிஷ் எதிர்பாராத விதமாக திறந்த நிலையில் இருந்து தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டார். 

இதனை கவனிக்காத தாய் திவ்யா சிறிது நேரம் கழித்து குழந்தையை காணவில்லை என அக்கம் பக்கம் தேடிப் பார்த்துவிட்டு, பின்பு தொட்டியில் பார்த்த போது குழந்தை தண்ணீரில் மிதந்துள்ளார். 

அதனை பார்த்த திவ்யா கத்தி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து குழந்தையை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த  மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததால் குழந்தையின் பெற்றோர்கள் உறவினர்கள் கதறி அழுதனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் குழந்தை இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

selam child death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->