விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம்..சொல்கிறார் சீமான்! - Seithipunal
Seithipunal


பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றுள்ள விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம்  சீமான் சீமான் வெளிப்படையாக பேசியுள்ளார்.

மதுரையில் விசாரணை கைதிகளாக சிறையிலுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரின் குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, 15 ஆண்டுகளாக சிறையில் மூவரும் விசாரணை சிறைக் கைதிகளாகவே உள்ளனர்.

இறக்கும் தருவாயில் உள்ள அவர்களை  சிறையில் அடித்து சித்ரவதை செய்வதுடன் குடும்பத்தினர் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.  இஸ்லாமிய மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என சொல்கிறார்கள்.

சிறையிலேயே வைத்து பாதுகாப்பீர்களா? என அரசுக்கு கேள்வி எழுப்பிய சீமான் ,இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தார் ஸ்டாலின். ஆனால் இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இஸ்லாமிய தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் இந்த ஆட்சியை வீழ்த்தும். உடல்நிலை காரணம் கருதி கைதிகளை விடுதலை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் இந்த அரசு விட முடியாது என பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இதை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்'குற்றத்தை ஒத்துக்கொள்ளுமாறு சிறையில் கைதிகளை அடித்து துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர். 

பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுள்ள விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம். எனக்கு யாருமே போட்டி கிடையாது என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman says that doing politics with Vijay is difficult


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->