தமிழகத்தின் தேசிய மரமான பனைமரத்தை ஒரு ஜாதியின் மரமாக மாறியது ஏன்? சீமான் ஆவேசம்..!
Seeman is furious about why the palm tree the national tree of Tamil Nadu has become a tree of a caste
தமிழகத்தின் தேசிய மரமான பனைமரத்தை எப்படி ஒரு ஜாதியின் மரமாக மாறியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஜூன் 15-ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை அருகே பனைமரத்தில் ஏறி, சீமான் கள் இறக்கி, அங்குள்ள அனைவருக்கும் சீமான் வழங்கினார்.
இது குறித்து சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: கள்ளுக்கடையை திறந்தால் டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கும் என்பதால் கள்ளுக் கடையை மூடுகிறார்கள் என்றும், கள்ளுக்கடையை திறந்தால் டாஸ்மாக்கில் வியாபாரம் படுத்துவிடும். இதனை தவிர வேறு ஏதும் காரணம் இருக்கா சொல்லுங்க? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், தமிழகத்தின் தேசிய மரம் பனைமரம், அது எப்படி ஒரு ஜாதியின் மரமாக மாறியது என்றும், நான் பனைமரம் ஏறினால் அது ஜாதி பெயராக மாறிவிடுகிறது என்று தெரிவித்துள்ளார்
மேலும், புதுச்சேரியில் கள் விற்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் அது போதைப்பொருளானது எப்படி? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நான் பனை மரம் ஏறியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார். என்று சீமான் பேசியுள்ளார்.
English Summary
Seeman is furious about why the palm tree the national tree of Tamil Nadu has become a tree of a caste