தூக்கப்பட்ட முக்கிய புள்ளிகள்.. பதறிப்போன சீமான்.!! தடை மீறிய போராட்டம் ரத்து.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம்வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாக கூறி காவல்துறை அனுமதி மறத்தது. 

இந்த நிலையில் தடையை மீறி இன்று மாலை போராட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் அன்புத் தென்னரசன், சால்டின், சுரேஷ் உள்ளிட்டோரை முன்னெச்சரிக்கையாக போலீசார் கைது செய்துள்ளனர்.

இதேபோன்று நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோலன், மாவட்ட செயலாளர் சாமி ரவி ஆகியோரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடலூர் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே இன்று மாலை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி உரிய அனுமதி பெற்று மாற்று தேதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman cancelled NTK protest for vadalur issue


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->