தலைமைச் செயலகத்தில் இன்று அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசியக்கொடி..காரணம் என்ன?!! - Seithipunal
Seithipunal


ஈரானில் கடந்த மே 20 ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிர் இழந்து விட்டதாக அந்நாட்டு செய்தி சேனல் உறுதிப்படுத்தியது. அவருடன் வெளியுறவு துறை அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாயனும் உயிரிழந்தார். வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கான இமாம் முகமது அலி அலே-ஹஷேம் உள்ளிட்ட பலர் ஈரானின் வடமேற்குப் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தனர் என்று எக்ஸ் சமூகவலைதளத்தில் ஈரான் ஊடகம் ஒன்று பதிவிட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து வனப்பகுதிக்கு நடுவே நடைபெற்றதால் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. ட்ரோன்கள் உதவி மூலம் விபத்து நடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது அதில் யாரும் உயிரோடு இல்லை என்பது தெரிவிக்கப்பட்டது. இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்தது மட்டுமல்லாமல் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மரணமடைந்தார். இதனை அடுத்து அவரது மறைவை அடுத்து, இந்தியாவில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Secretariat today national flag half flying


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->