திடீரென உள்வாங்கிய கடல் - பாம்பனில் ஏமாற்றத்துடன் திரும்பிய மீனவர்கள்.!
sea absorbed near bamban in rameshwaram
திடீரென உள்வாங்கிய கடல் - பாம்பனில் ஏமாற்றத்துடன் திரும்பிய மீனவர்கள்.!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால் நாட்டுப்படகுகள் கரையில் தரைதட்டியபடி நின்றன. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதாவது, பாம்பன் பகுதியின் வட கடலான பாக்ஜலசந்தி கடல் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திடீரென உள்வாங்கியது. இதன் காரணமாக பாம்பன் லைட் ஹவுஸ் தெரு கடலோரத்தில் 200 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.

இதனால் கடலில் பாசிப்படர்ந்த பவளப்பாறைகள் வெளியில் தெரிந்தன. கடல் சிப்பிகள், மீன் குஞ்சுகள் உள்ளிட்டவை ஆங்காங்கே தேங்கி கிடந்த கடல்நீர் குட்டையில் தத்தளித்து கொண்டிருந்தன.
இதையறியாமல் அதிகாலையில் மீன்பிடிக்க வந்த மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு பின் கடல்நீர் மட்டம் உயர்ந்ததும் பாம்பன் கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது.
English Summary
sea absorbed near bamban in rameshwaram