பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - முதல்வர் போக்ஸோவில் கைது.!!
school principal arrested for harassment in dharmapuri
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் முதல்வராக வினுலோகேஸ்வரன் என்பவர் இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு வினுலோகேஸ்வரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிசார், ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் வினுலோகேஸ்வரனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school principal arrested for harassment in dharmapuri