தவெகவினர் வெளியிட்ட வீடியோவால் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னிலை பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் இந்தப் பள்ளிக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு சில இளைஞர்கள் வந்து, நங்கள் இந்தப் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு தலைமை ஆசிரியர் சுஜாதா சியாமளா ஒப்புதல் அளித்துள்ளார்.

உடனே இளைஞர்கள் பொக்லின் இயந்திரம் ஒன்றைக் கொண்டு வந்து பள்ளியை சுத்தம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து, அதனை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பள்ளிக்கூடம் சுத்தம் செய்து கொடுக்கப்பட்டதாக நிர்வாகி பெயரை போட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வமணி அப்பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து, அரசுப் பள்ளியில் இதுபோன்ற அரசியல் நிகழ்வுகள் செய்வதற்கு முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறாமல் நடந்ததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுஜாதாவை குளித்தலை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school head master transfer for tvk fans school ground clean vedio in karoor


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->