ஸ்டாலினுக்கு தகுதியே இல்ல - பரப்பரப்பைக் கிளப்பிய சி.வி.சண்முகம்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூரில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து தெரு முனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

"தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் செல்லும் இடமெல்லாம் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சியில் ஒரே குடும்பமான கோபாலபுரத்து குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழகத்தில் விலைவாசியை உயர்த்திள்ளனர். ஆனால் கூலியும், சம்பளமும் உயரவில்லை. ஊழல் மட்டும் உயர்ந்துள்ளது. தி.மு.க.வில் குடும்பத்தினரை தவிர வேறு யாரு முதலமைச்சராக வர முடியாது. சாதாரண தொண்டனாக இருந்த எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளராக வந்துள்ளார். 

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்டதில் இருந்து ஸ்டாலினுக்கு தூக்கம் போச்சு. இந்தியாவை 11 ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருக்கிற ஒரு பிரதமராக மோடி இருக்கிறார். பா.ஜ.க.-அ.தி.மு.க. குறித்து பேச ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது. தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத இடமே இல்லை. இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேலை நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டம் நடத்திய போது முதலமைச்சர் ஸ்டாலின் ரஜினி படம் பார்த்து கொண்டிருந்தார். பா.ஜ.க. கூட்டணியில் இருப்பது எங்க விருப்பம். உங்களுக்கு ஏன் வலிக்கிறது. 

அ.தி.மு.க. எத்தனை பிரிவாக இருந்தால் உங்களுக்கு என்ன, அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு சாத்தியம் இல்லை. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவரை கட்சியில் ஏன் சேர்க்க வேண்டும். பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.விற்கும் நல்ல பெயர் வந்துவிட கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cv shanmugan speech about dmk


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->