விளையாட்டு மைதானம் புதுப்பிக்கும் பணி..நேரில் ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்ட விளையாட்டு மைதானம் புதுப்பிக்கும் பணி மற்றும் ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் டைவிங் வசதியுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கும் பணியினை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-தமிழ்நாடு முழுவதும் மாவட்ட விளையாட்டு மைதானங்கள், உள் விளையாட்டு அரங்கங்கள், நவீன உடற்பயிற்சி கூடங்கள், சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு விடுதி கட்டடங்கள் என பல்வேறு விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும்,  சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தமிழ்நாடு அரசுடன் இணைந்து வருகின்ற 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் மதுரையில் ஆண்கள் ஜுனியர் உலகக்கோப்பை 2025 போட்டியை நடத்த உள்ளது. இதற்காக மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானம் ரூ.9.47 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளியுடன் கூடிய மைதானமாக புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.9.47 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளியுடன் கூடிய வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானமாக புதுப்பிக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் டைவிங் வசதியுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு பணி முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதை நேரில் பார்வையிட்ட தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாரா விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். 

இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The work of renovating the playground Udhayanidhi Stalin inspected it on site


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->