பள்ளி மாணவி மீது பாலியல் தொல்லை…! 24 வயது இளைஞர் போக்சோவில் கைது...!
School girl subjected harassment 24yearold man arrested under POCSO Act
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறப்பு வகுப்பு முடிந்து வழக்கம்போல் வீடு நோக்கி நடந்து வந்த போது, மாரீஸ்வரன் (24) என்ற இளைஞர் அவரை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டுக்குள்ளான மாரீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் இன்னொருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதால், அவரை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
School girl subjected harassment 24yearold man arrested under POCSO Act