#நெல்லை : உச்சி‌ வெயிலில் மோடிக்காக தரையில் அமர வைக்கப்பட்ட பள்ளி சிறுவர்கள்.!!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக தமிழகம் வந்த நிலையில் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, கட்டுமான பணிகள் நடைபெற்று முடிந்த திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். 

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திருநெல்வேலியில் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சாலை மார்க்கமாக புறப்பட்டுச் சென்றார். 

பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் பாஜகவினர் என பலர் வழி நெடுக காத்திருந்தனர். அவ்வாறு காத்திருந்த பள்ளி மாணவர்கள் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். நரேந்திர மோடிக்காக பள்ளி மாணவர்கள் உச்சி வெயிலில் தரையில் அமர வைக்கப்பட்டிருந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School children waiting under trees for Narendra Modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->