பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு சலுகை! அதிரடி அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


சாலை விபத்து உள்ளிட்ட விபத்துகளில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நேரத்தில் சலுகை வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ஆரம்பிக்க உள்ளது. 

பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திடீர் உடல்நல குறைவு மற்றும் விபத்துகளில் சிக்கிய மாணவர்களின் நலன் கருதி, 
தேர்வு நேரத்தில் சலுகை வழங்க தேர்வுத்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களே அனுமதி வழங்க அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. 

அதன்படி, பொதுத்தேர்வு எழுதும் நேரத்தில் சலுகைகள் கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், எதிர்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள், மருத்துவ சான்றிதழ்களின் அடிப்படையில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவு செய்து சலுகை வழங்கலாம். 

மருத்துவ சான்றிதழ்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அதற்குரிய கூடுதல் ஆவணங்களை தேர்வு எழுதிய பின்னர் சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும். 

அவ்வாறு சான்றிதழை சமர்ப்பிக்காத தேர்வர்களுக்கு தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School Board exam accident time extend


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->