சத்குரு ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் திடீர் அனுமதி.!
sathguru jakku vasudev admitted hospital
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவு கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 17ம் தேதி அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதோடு, கடுமையான வாந்தி ஏற்பட்டுள்ளது.
இதனால், அவர் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது, அவரது மூளையில் இரத்தப்போக்குடன் ஒரு முக்கியமான வீக்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் குழு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்தது.
அதன் பிறகு, சத்குரு வென்டிலேட்டரில் இருந்த நிலையில் தற்போது அவருக்கு வென்டிலேட்டர் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவரது மூளை, உடல் மற்றும் முக்கிய அளவுருக்கள் நிலையான முன்னேற்றத்தைக் காட்டுகின்றதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
sathguru jakku vasudev admitted hospital