சாத்தான்குளம் வழிகாட்டிப் பலகையில் இந்தி விவகாரம்: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் - தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Sathankulam Signage Controversy TN Govt Suspends Two Engineers Official Press Release Reaffirms Two-Language Policy
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் - நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக அமைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்த விவகாரத்தில், தொடர்புடைய இரு அரசு அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கண்டனமும் இந்தி எழுத்துகள் நீக்கமும்:
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் இந்தி இடம்பெற்றதற்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, வழிகாட்டிப் பலகையிலிருந்த இந்தி எழுத்துகள் உடனடியாக அகற்றப்பட்டு, இருமொழிக் கொள்கைக்கு ஏற்பப் புதிய பெயர்ப் பலகை சீரமைக்கப்பட்டது.
2 அதிகாரிகள் சஸ்பெண்ட் & அரசின் நடவடிக்கை:
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது துறைரீதியான தீவிர நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் காரசாரமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
English Summary
Sathankulam Signage Controversy TN Govt Suspends Two Engineers Official Press Release Reaffirms Two-Language Policy