சாத்தான்குளம் கொலை வழக்கு..இன்ஸ்பெக்டரின் அப்ரூவர்..சிபிஐ எதிர்ப்பு..!
Sathankulam murder case Inspectors approver CBIs opposition
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டரின் அப்ரூவர் கோரிக்கைக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரட்டைக்கொலை குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்..
இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவால் பால்துரை உயிரிழந்தார். இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர், தான் அப்ரூவராக மாற அனுமதித்தால் காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும், உண்மையையும் கூறுவதாக, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ஸ்ரீதர் அப்ரூவராக மாறுவதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோன்று கொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
English Summary
Sathankulam murder case Inspectors approver CBIs opposition