பாப்கார்ன் வாங்க சொல்லி வற்புறுத்திய சம்பவம்.. பிரபல திரையரங்கில் ரசிகர் வாக்குவாதம்.!
salem theatre popcorn must buy issue
சேலத்தில் இருக்கின்ற பிரபல திரையரங்கு ஒன்றில் கட்டாயம் பாப்கார்ன் வாங்க வேண்டுமென வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திரையரங்குகளில் டிக்கெட் விலை மற்றும் உணவு குறித்த பல்வேறு விஷயங்கள் சர்ச்சையாகி வருகின்றது. இதனை தொடர்ந்து, தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள திரையரங்கில் டிக்கெட் வாங்கும் போது கட்டாயம் பாப்கார்ன் வாங்க சொல்வதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதனால், பாப்கார்ன் வாங்க சொல்லி வற்புறுத்துவதாக ரசிகர் ஒருவர் குற்றச்சாட்டு வைத்தவாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இதே திரையரங்கில் கடந்த வாரம் உணவு பொருட்களில் தரம் குறைவாக இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கிருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளினால் அந்த தியேட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
salem theatre popcorn must buy issue